கேட்டது சுத்தமான மூச்சுக்காற்று, கிடைத்தது நின்றுபோன மூச்சு: ஜிவி பிரகாஷ்

கடந்த 100 நாட்களாக நடந்து வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு ஆரம்பம் முதலே ஆதரவு கொடுத்து வருபவர்களில் ஒருவர் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ். இந்த நிலையில் இன்று போராட்டக்காரர்களுக்கு எதிரான துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒன்பது பேர் பலியான விவகாரம் குறித்து ஜிவி பிரகாஷ் கூறுகையில் சுவாசிக்க தூய்மையான காற்றை கேட்டவர்களின் மூச்சை நிறுத்திவிட்டது இந்த சனநாயகம். என்று கடுமையாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி
 

கேட்டது சுத்தமான மூச்சுக்காற்று, கிடைத்தது நின்றுபோன மூச்சு: ஜிவி பிரகாஷ்கடந்த 100 நாட்களாக நடந்து வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு ஆரம்பம் முதலே ஆதரவு கொடுத்து வருபவர்களில் ஒருவர் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ். இந்த நிலையில் இன்று போராட்டக்காரர்களுக்கு எதிரான துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒன்பது பேர் பலியான விவகாரம் குறித்து ஜிவி பிரகாஷ் கூறுகையில் சுவாசிக்க தூய்மையான காற்றை கேட்டவர்களின் மூச்சை நிறுத்திவிட்டது இந்த சனநாயகம். என்று கடுமையாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மக்கள் போராடுவதற்கு தடை விதிக்க முடியாது என்பதால், தங்கள் உரிமைக்காக அமைதி பேரணி சென்ற எம் மக்கள் மீது தடியடி, துப்பாக்கி சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கதக்கது.

சில நூறு பேர் கொண்ட உங்களுக்கு முன்னால் நிற்கும் பல்லாயிரக்கணக்கான எம் மக்களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும்… வரலாற்று பிழை செய்து விட்டீர்கள்.

From around the web