என்னுடைய சூப்பர்வுமன் இவர்தான்: ஜிவி பிரகாஷ் பதிவு செய்த புகைப்படம்

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி தம்பதியினருக்கு கடந்த மாதம் அழகிய பெண் குழந்தை பிறந்தது என்பதும் இந்த குழந்தைக்கு ’அன்வி’ என்றும் என்று பெயரிட்டார்கள் என்பதும் தெரிந்ததே இந்த குழந்தைக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில் முதன்முதலாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஊடகம் ஒன்றில் குழந்தையின் புகைப்படத்துடன் ஜிவி பிரகாஷ்-சைந்தவி தம்பதியின் புகைப்படம் வெளிவந்தது இந்த நிலையில் நேற்று ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் முதல் முதலாக
 

என்னுடைய சூப்பர்வுமன் இவர்தான்: ஜிவி பிரகாஷ் பதிவு செய்த புகைப்படம்

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி தம்பதியினருக்கு கடந்த மாதம் அழகிய பெண் குழந்தை பிறந்தது என்பதும் இந்த குழந்தைக்கு ’அன்வி’ என்றும் என்று பெயரிட்டார்கள் என்பதும் தெரிந்ததே

இந்த குழந்தைக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில் முதன்முதலாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஊடகம் ஒன்றில் குழந்தையின் புகைப்படத்துடன் ஜிவி பிரகாஷ்-சைந்தவி தம்பதியின் புகைப்படம் வெளிவந்தது

இந்த நிலையில் நேற்று ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் முதல் முதலாக குழந்தை அன்வியின் புகைப்படத்தை பதிவு செய்தார். ஒரு பூந்தொட்டியில் இருக்கும் அழகிய தேவதை போல் இருந்த இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக பெரிய அளவில் வைரலானது

இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் தனது குழந்தையின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். என்னுடைய சூப்பர் உமன் இவர்தான் என்றும் ’அன்வி’ என்றும் குறிப்பிட்டு ஜிவி பிரகாஷ் பதிவு செய்துள்ள இந்த புகைப்படம் கடந்த சில நிமிடங்களாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பதும் ரசிகர்கள் குழந்தை அன்விக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web