தீபாவளி திரைப்படங்களுக்கு க்ரீன் சிக்னல்: முடிவுக்கு வந்தது விபிஎப் பிரச்சனை!

 

தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகளில் திறக்கப்பட உள்ளன என்பதும் இருப்பினும் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாததால் பழைய திரைப்படங்கள் மட்டுமே திரையிடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெங்களூரு உள்பட பல நகரங்களில் பழைய திரைப்படங்களை திரையிட்டு மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு இடையில் நடைபெற்று வந்த பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. விபிஎப் கட்டணத்தை முழுவதுமாக தாங்களே ஏற்றுக்கொள்வதாக கியூப் நிறுவனம் அறிவித்துள்ளது

diwali movies

ஆனால் அதே நேரத்தில் நவம்பர் மாதத்திற்கு மட்டுமே இந்த கட்டணத்தை தாங்கள் ஏற்றுக் கொள்ள இருப்பதாகவும் அதற்குள் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு வர வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 

தீபாவளி திரைப்படங்கள் ரிலீஸ் ஆகவேண்டும் என்பதை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளதாக கியூப் அறிவித்துள்ளது. இந்த நிலையில் தீபாவளி அன்று இருட்டு அறையில் முரட்டுகுத்து உள்பட ஒரு சில திரைப்படங்கள் தீபாவளி அன்று திரைக்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 

தீபாவளி அன்று திரைக்கு வரும் கூட்டத்தை பொறுத்துத்தான் ‘மாஸ்டர்’ உள்பட ஒரு சில திரைப் படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது

From around the web