இந்தியன் 2 படத்தை முடித்து தருகிறேன் உறுதியளித்தார் பிரம்மாண்ட இயக்குனர்!

இந்தியன் 2 படத்தை அக்டோபர் மாதத்திற்குள் முடித்து தர முயற்சிக்கிறேன் என்று பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் ஐகோர்ட்டில்!
 
இந்தியன் 2 படத்தை முடித்து தருகிறேன் உறுதியளித்தார் பிரம்மாண்ட இயக்குனர்!

தனது இயக்கத்தால் இன்று மக்கள் மனதில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் பிரபல இயக்குனர் சங்கர். இவர் ரஜினி கமல் விஜய் என்று பல பிரபலங்களுக்கு வெற்றிப்படங்களை அள்ளிக் கொடுத்தார் என்பது தவிர்க்க முடியாத உண்மைதான். மேலும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து எந்திரன் என்ற திரைப்படத்தினை இயக்கி அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது இவர் மக்கள் மத்தியில் உலகநாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கமலஹாசனை வைத்து இந்தியன்2 என்ற படத்தினை இயக்கி வந்ததாக கூறப்படுகிறது.

shankar

 இதனை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. லைக்கா நிறுவனத்தின் சார்பில் இயக்குனர் சங்கரின் மீது மேல்முறையீட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சார்பில் இயக்குனர் சங்கர் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு படத்தை இயக்க தடை விதிக்கவும் கோரிக்கை எடுத்தது. இந்நிலையில் இதற்காக பிரமாண்ட இயக்குனர் சங்கர் கூறியுள்ளார். அதன்படி அவர் இந்தியன் 2 படத்தை அக்டோபர் மாதத்திற்குள் முடித்து தர முயற்சிக்கிறேன் என்று சென்னை ஐகோர்ட்டில் கூறியுள்ளார். மேலும் ஜூலை முதல் அக்டோபர் காலகட்டத்தில் தான் ப்ரீயாக இருப்பதால் இந்த இந்தியன் 2 படத்தை முடித்துக் முடிக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் அவர் நடிகர் விவேக் மறைவால் அவரின் கதாபாத்திரத்திற்கு வேறு நடிகரை வைத்து காட்சிகள் எடுக்க வேண்டி உள்ளது என்றும் அவர் கூறினார். மேலும் நீதிமன்ற உத்தரவால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் லைக்கா மற்றும் சங்கர் கலந்து பேசி இந்தியன் துபட பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

From around the web