அட்டகாசமான நெற்றிக்கண் டீஸர்: ஆடு நரி கதையைக் கூறி அசத்திய நயன்தாரா!

 

லேடி சூப்பர் ஸ்டார் நடித்த நயன்தாரா நடித்த நெற்றிக்கண் என்ற திரைப்படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் ஒரு நிமிடம் மட்டுமே உள்ள இந்த டீசரில் ஓராயிரம் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நயன்தாரா.

முதன் முதலாக பார்வையற்ற மாற்றுத்திறனாளி வேடத்தில் நடித்துள்ள நயன்தாரா இதுவரை இல்லாத அளவில் தனது உச்சபட்ச நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என்று தான் கூற வேண்டும். குறிப்பாக அவர் ஆடு, நரி கதையைக் கூறும் பாணியும், அதற்கேற்ற காட்சிகளும் டீசரை பார்க்கும்போதே படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு உள்ளது

netrikkan

சமீபத்தில் வெளியான நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படமும் வெற்றி பெற்றால் அவர் சம்பளமும் புகழும் வேற லெவலில் உயரும்  என்பது குறிப்பிடத்தக்கது 

‘அவள்’ என்ற த்ரில் திரைப்படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு கிரிஷ் இசை அமைத்துள்ளார். நயன்தாராவின் காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் இந்த படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web