சத்தமில்லாமல் கோல்டன் மெலடிகளை அள்ளி வீசிய வி.எஸ் நரசிம்மன்

இவர் ஒரு வயலின் கலைஞர் ஆவார் இளையராஜாவிடம் பல படங்களில் வயலின் கலைஞராக பணிபுரிந்தவர் இவர். எண்பதுகளில் இளையராஜா இசையமைத்த போது பாலச்சந்தரின் படங்களில் இவரும் தனிப்பட்ட முறையில் இசையமைத்துள்ளார். அதில் அச்சமில்லை அச்சமில்லை படம் முக்கியமானது ஆவாரம்பூவு ஆறேழு நாளா, ஓடுகிற தண்ணியில உரசி விட்டேன் சந்தனத்த போன்ற பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றதுதான். பாலச்சந்தரின் தயாரிப்பில் வந்த புதியவன் படத்தின் தேன்மழையிலே தினம் நனையும் உன் நெஞ்சமே போன்ற பாடல்கள் தேன் சொட்டும் பாடல்களாக விளங்கின.
 

இவர் ஒரு வயலின் கலைஞர் ஆவார் இளையராஜாவிடம் பல படங்களில் வயலின் கலைஞராக பணிபுரிந்தவர் இவர். எண்பதுகளில் இளையராஜா இசையமைத்த போது பாலச்சந்தரின் படங்களில் இவரும் தனிப்பட்ட முறையில் இசையமைத்துள்ளார். அதில் அச்சமில்லை அச்சமில்லை படம் முக்கியமானது ஆவாரம்பூவு ஆறேழு நாளா, ஓடுகிற தண்ணியில உரசி விட்டேன் சந்தனத்த போன்ற பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றதுதான். பாலச்சந்தரின் தயாரிப்பில் வந்த புதியவன் படத்தின் தேன்மழையிலே தினம் நனையும் உன் நெஞ்சமே போன்ற பாடல்கள் தேன் சொட்டும் பாடல்களாக விளங்கின. நானோ கண் பார்த்தேன் என்றொரு பாடல் இப்படத்தில் இடம்பெற்ற அற்புத மெலடி.

சத்தமில்லாமல் கோல்டன் மெலடிகளை அள்ளி வீசிய வி.எஸ் நரசிம்மன்

சரத்குமார் நடித்து தயாரித்த கண்சிமிட்டும் நேரம் படத்தில் விழிகளில் கோடி அபிநயம் என்று இவர் போட்ட மெட்டு இன்று வரை திகட்டாத கானமாகி பல ரசிகர்களை இவருக்கு பெற்றுத்தந்துள்ளது.

இவர் இசைத்த மோகன் நடித்த ஆயிரம் பூக்கள் மலரட்டும் படத்தின் பூ மேடையோ பொன்வீணையோ பாடல் மற்றொரு அற்புத மெலடி.

இளையராஜாவின் பாடல்களை போன்றே இவர் பாடல்கள் இருந்ததும் ஒரு சிறப்பான விசயமாக இருந்தது.

தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர்.

From around the web