இந்திக்கு போகும் ‘சூரரை போற்று: சூர்யா வேடத்தில் யார்?

 

சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தை திரையுலக பிரபலங்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும் அனைத்து ஊடகங்களும் இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இயக்குன்ர் சுதாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

இந்த நிலையில் சூரரைப்போற்று படத்தை இந்தியில் படமாக்க முன்னணி நிறுவனம் ஒன்று திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதாகவும் தெரிகிறது. சூர்யா நடித்த கேரக்டரில் அக்ஷய்குமார் நடிக்கவிருப்பதாகவும் அபர்ணா நடித்த கேரக்டரில் தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாகவும் தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே ஹிந்தியிலும் இந்த படத்தை இயக்குவார் என தெரிகிறது

akshaykumar

ஆனால் அதற்கு முன்னர் அஜீத் நடிக்கும் படத்தை சுதா இயக்கி முடித்து விட்டு அதன் பின்னரே சூரரை போற்று இந்திக்கு செல்வார் என்று கூறப்படுகிறது. சூரரை போற்று திரைப்படம் ஏற்கனவே தென்னிந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ஹிந்தியில் உருவானால் வட இந்தியாவிலும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்கி 2022ஆம் ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது

From around the web