தியாகம் செய்யவாவது அனுமதி கொடுங்கள்: நீதிமன்றம் சென்ற இளையராஜா 

 

கடந்த சில மாதங்களாக இசை ஞானி இளையராஜா அவர்களுக்கும் பிரசாத் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்திற்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள ஒரு அரங்கை இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக தனது இசைப்பணிக்கு பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது அந்த இடத்தை காலி செய்யக்கோரி பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர் 

இதன் காரணமாக இளையராஜாவுக்கும் ஸ்டூடியோ நிர்வாகத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டு தற்போது நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தனது ரெக்கார்டிங் அறையில் தான் தியானம் செய்ய வேண்டும் என்றும் அந்த ஸ்டுடியோவுக்கு சென்று ஒரு நாள் தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் இசை இளையராஜா நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார் 

ilaiyarajaa

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது இளையராஜாவுக்கு தியானம் செய்ய அனுமதிப்பது குறித்து வழக்கறிஞர்கள் வாதாடினர். விசாரணையின் இறுதியில் பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள இடம் இளையராஜாவுக்கு உரிமை உள்ளதா என்பதையும் தாண்டி மனிதாபிமான அடிப்படையில் இளையராஜாவை ஒருநாள் தியானம் செய்ய ஏன் அனுமதிக்க கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து ஸ்டுடியோ நிர்வாகம் விளக்கம் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web