கமல்ஹாசனின் நெருக்கமான நடிகைக்கு பெண்குழந்தை: ரகசிய திருமணமா?

கடந்த சில ஆண்டுகளாக கமல்ஹாசன் அவர்களுடன் நெருக்கமாக இருப்பதாக கூறப்படுபவர் நடிகை பூஜாகுமார். கமல்ஹாசனின் குடும்ப நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் நடந்த போது குடும்ப உறுப்பினர் மட்டுமே கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் பூஜா குமாரும் கலந்து கொண்டார் என்பதும் அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் அறிந்ததே
இந்த நிலையில் பூஜாகுமாருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூஜா குமாருக்கு திருமணம் நடந்ததே யாருக்கும் தெரியாத நிலையில் அவருக்கு பெண் குழந்தையா? என ரசிகர்கள் ஆச்சர்யப்பட்ட நிலையில் அவரது கணவரான விஷால் ஜோஷி என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனக்கும் எனது மனைவி பூஜாகுமாருக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது என மிகுந்த மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்
இதுவரை நாங்கள் இருவராக இருந்தோம் என்றும் இப்போது மூவராக மாறியுள்ளோம் என்றும் எனது வாழ்க்கையின் மிகவும் மகிழ்ச்சியான தருணம் இதுதான் என்றும் இன்ஸ்டாவில் குறிப்பிட்டுள்ளார் மேலும் தனது குழந்தை மற்றும் மனைவி பூஜா குமாருடன் இணைந்து உள்ள புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
கமல்ஹாசனின் நெருக்கமான நடிகைக்கு திருமணம் நடந்தது தெரியாத நிலையில் திடீரென குழந்தை பிறந்து உள்ளதாக வந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது