முரட்டு குத்து பட இயக்குனரின் அடுத்த படத்திற்கு ‘யூ’ சான்றிதழ்

சமீபத்தில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற ‘ஏ’ சான்றிதழ் பெற்ற அடல்ட் காமெடி படத்தை இயக்கிய சந்தோஷ் P ஜெயகுமார் தற்போது இயக்கி முடித்துள்ள படம் ‘கஜினிகாந்த்’ இந்த படம் பிரபல தெலுங்கு படம் ஒன்றின் ரீமேக் என்று கூறப்படுகிறது இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யூ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இயக்குனர் சந்தோஷ் இயக்கிய இரண்டு படங்களும் ‘ஏ’ சான்றிதழ்
 

முரட்டு குத்து பட இயக்குனரின் அடுத்த படத்திற்கு ‘யூ’ சான்றிதழ்

சமீபத்தில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற ‘ஏ’ சான்றிதழ் பெற்ற அடல்ட் காமெடி படத்தை இயக்கிய சந்தோஷ் P ஜெயகுமார் தற்போது இயக்கி முடித்துள்ள படம் ‘கஜினிகாந்த்’ இந்த படம் பிரபல தெலுங்கு படம் ஒன்றின் ரீமேக் என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யூ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

முரட்டு குத்து பட இயக்குனரின் அடுத்த படத்திற்கு ‘யூ’ சான்றிதழ்இயக்குனர் சந்தோஷ் இயக்கிய இரண்டு படங்களும் ‘ஏ’ சான்றிதழ் பெற்ற நிலையில் இந்த படம் மட்டும் ‘யூ’ சான்றிதழ் பெற்றுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆர்யா, சாயிஷா, கருணாகரன், சதீஷ், காளி வெங்கட், ராஜேந்திரன், சம்பத் ராஜ், ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பாலமுராளி பாலு இசையமைத்துள்ளார். ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படம் மிக விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web