திருமாவளவன் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த காயத்ரி ரகுராம்! அரசியல் நாகரீகம் என பாராட்டு

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான காயத்ரி ரகுராம் கடந்த சில மாதங்களாகவே விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் குறித்து கடுமையான விமர்சனம் செய்து வந்ததும் அதற்கு விடுதலை சிறுத்தைகள் தொண்டர்களும் பதிலடி கொடுத்து வந்தனர் என்பதும் தெரிந்ததே குறிப்பாக கருப்பர் கூட்டம் விவகாரத்தில் காயத்ரி ரகுராமுடன் விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் காரசாரமாக விவாதம் செய்தனர். இந்த நிலையில் நேற்று கொரோனாவால் திருமாவளவனின் சகோதரி பானுமதி என்பவர் மரணமடைந்தார் என்ற செய்தி அறிந்ததும் காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில்
 

திருமாவளவன் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த காயத்ரி ரகுராம்! அரசியல் நாகரீகம் என பாராட்டு

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான காயத்ரி ரகுராம் கடந்த சில மாதங்களாகவே விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் குறித்து கடுமையான விமர்சனம் செய்து வந்ததும் அதற்கு விடுதலை சிறுத்தைகள் தொண்டர்களும் பதிலடி கொடுத்து வந்தனர் என்பதும் தெரிந்ததே

குறிப்பாக கருப்பர் கூட்டம் விவகாரத்தில் காயத்ரி ரகுராமுடன் விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் காரசாரமாக விவாதம் செய்தனர்.

இந்த நிலையில் நேற்று கொரோனாவால் திருமாவளவனின் சகோதரி பானுமதி என்பவர் மரணமடைந்தார் என்ற செய்தி அறிந்ததும் காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்

திருமாவளவன் அவர்களின் சகோதரி குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் அவர் இந்த செய்தியை கேட்டு தான் மிகவும் வருத்தம் அடைந்ததாக கூறியுள்ளார்

அரசியலில் எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் திருமாவளவன் குடும்பத்தினர் ஒருவரின் மரணத்திற்கு காயத்ரி ரகுராம் அரசியல் நாகரீகம் கருதி இரங்கல் தெரிவித்துள்ளதை டுவிட்டர் பயனாளிகள் பலர் பாராட்டி வருகின்றனர்

From around the web