பிஜேபி ஆதரவை கைவிட்ட காயத்ரி ரகுராம்

மறைந்த நடன இயக்குனர் ரகுராமின் மகள் காயத்ரி ரகுராம். சார்லி சாப்ளின் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் காயத்ரி. இவர் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் நீண்ட இடைவேளைக்கு பிறகு புகழ்பெற்றார். இவர் பாரதிய ஜனதா கட்சியையும் பிரதமர் மோடியையும் தீவிரமாக ஆதரிப்பவர். ராகுலை எதிர்த்தும் பிரதமர் மோடியை ஆதரித்தும் தீவிர பதிவுகள் இட்டு வந்த இவர் இப்போது இதுபோல விசயங்களில் இருந்து ஒதுங்கியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். “வெறும்
 

மறைந்த நடன இயக்குனர் ரகுராமின் மகள் காயத்ரி ரகுராம். சார்லி சாப்ளின் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் காயத்ரி. இவர் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் நீண்ட இடைவேளைக்கு பிறகு புகழ்பெற்றார்.

பிஜேபி ஆதரவை கைவிட்ட காயத்ரி ரகுராம்

இவர் பாரதிய ஜனதா கட்சியையும் பிரதமர் மோடியையும் தீவிரமாக ஆதரிப்பவர்.

ராகுலை எதிர்த்தும் பிரதமர் மோடியை ஆதரித்தும் தீவிர பதிவுகள் இட்டு வந்த இவர் இப்போது இதுபோல விசயங்களில் இருந்து ஒதுங்கியுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
 

“வெறும் வாக்குவாதமும், மற்றவர்களைக் குற்றம் சொல்வதுமாக அரசியல் இன்று மிகவும் தரம் தாழ்ந்துவிட்டது. குழந்தைகள் சண்டை போல இருக்கிறது.
 

வழிநடத்தவும் சரியானதொரு தலைவர்கள் இல்லை. நினைப்பது எதுவும் நடப்பதில்லை. மக்கள் என்ன முடிவெடுத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. நம்மால் இந்தியாவின் தலையெழுத்தை மாற்ற முடியுமா? எதுவும் நடப்பது போலத் தெரியவில்லை. யாரையும் ஆதர்சமாகப் பார்க்க முடியவில்லை. இப்போதைக்கு எனக்கு அரசியலில் ஆர்வம் குறைந்து வருகிறது. நமக்காக நான் வருத்தப்படுகிறேன் என இவர் கூறியுள்ளார்.

From around the web