மதுமிதாவின் கோபத்திற்கு கவினின் பாரபட்ச செயல்தான் காரணம்!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, இழந்த டி ஆர் பியை வனிதாவால் மட்டுமே மீட்டுத் தர முடியும் என்று தெரிந்துகொண்டு வனிதாவையே ஹோட்டல் விருந்தாளியாக வீட்டுக்குள் அனுப்பினர். மூன்று நாட்கள் நடந்த ஹோட்டல் விருந்தாளி லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க் முடிவுக்கு வந்தது. எப்போதும்போல் போட்டியில் சிறப்பாக விளையாடியவர்கள் மற்றும் மோசமாக விளையாடியவர்கள் தேர்வு செய்யும் செய்முறை தொடங்கியது. மோசமாக ஆடியவர்கள் தேர்வின்போது நேர மேலாண்மை இல்லாத லாஸ்லியாவினை தேர்வு செய்தார் சேரன். ஆனால்
 
மதுமிதாவின் கோபத்திற்கு கவினின் பாரபட்ச செயல்தான் காரணம்!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, இழந்த டி ஆர் பியை வனிதாவால் மட்டுமே மீட்டுத் தர முடியும் என்று தெரிந்துகொண்டு வனிதாவையே ஹோட்டல் விருந்தாளியாக வீட்டுக்குள் அனுப்பினர்.

மூன்று நாட்கள் நடந்த ஹோட்டல் விருந்தாளி லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க் முடிவுக்கு வந்தது. எப்போதும்போல் போட்டியில் சிறப்பாக விளையாடியவர்கள் மற்றும் மோசமாக விளையாடியவர்கள் தேர்வு செய்யும் செய்முறை தொடங்கியது.

மோசமாக ஆடியவர்கள் தேர்வின்போது நேர மேலாண்மை இல்லாத லாஸ்லியாவினை தேர்வு செய்தார் சேரன்.

மதுமிதாவின் கோபத்திற்கு கவினின் பாரபட்ச செயல்தான் காரணம்!

ஆனால்  கவின், லோஸ்லியாவைக் காப்பாற்ற அபிராமியைத் தேர்ந்தெடுத்தார், அத்துடன் அபிராமியே மோசமாக ஆடியவர் என்பதை வலுவாக மீண்டும் மீண்டும் சொல்லி அனைவரையும் நாமினேட் செய்ய வைத்தார் கவின். இது மதுமிதாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதில் அவருடைய காதலி லோஸ்லியா ஜெயிலுக்கு செல்லக் கூடாது என்ற நோக்கம் இருப்பது தெளிவாகத் தெரிந்தது.

லோஸ்லியா விஷயத்தில் பாரபட்சம் விஷயத்தினை நேரடியாக எடுத்து சொல்லத் தயங்கிய மதுமிதா, இந்தப் பிரச்சினையின்போது எடுத்துக் கூறினார். அதனால் கவினின் காதலி லோஸ்லியா தங்கள் உறவைப் பற்றி பேசக்கூடாது என்று கத்தினார்.

ஆனால் இப்பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் மதுமிதாவின் மனதில் அழியாமல் இருக்கும் கவினின் 4 பெண்களுடனான காதல் மட்டுமே ஆகும், தமிழ்க் கலாச்சாரத்தில் ஊறிய மதுமிதாவால் கவின் இந்தக் காதலை ஏற்க முடியவில்லை என பலரும் கூறி வருகின்றனர்.

From around the web