நம்பிக்கை துரோகம் செய்த கவின்- கன்னத்தில் அறைந்த கவினின் நண்பர்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்னும் 100 வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது, ஒவ்வொரு போட்டியாளரின் குடும்பத்தில் இருந்தும், குடும்ப உறுப்பினர்கள் வர ஆரம்பித்துவிட்டனர். நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் லோஸ்லியாவின் அப்பா மரியநேசன், அம்மா மேரி, இரு தங்கைகள் ஆகியோர் வந்தனர். லோஸ்லியா- கவின் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட குடும்பம் மனம் நொந்து இருந்தது. அந்த நிகழ்விற்குப் பின் கவின் மீதான கோபம் பார்வையாளர்களிடம் அதிகரித்து வருகிறது, அதிக அளவில் எதிர்ப்பினை சம்பாதித்து வருகிறார் கவின். லாஸ்லியாவும்
 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்னும் 100 வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது, ஒவ்வொரு போட்டியாளரின் குடும்பத்தில் இருந்தும், குடும்ப உறுப்பினர்கள் வர ஆரம்பித்துவிட்டனர்.

நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் லோஸ்லியாவின் அப்பா மரியநேசன், அம்மா மேரி, இரு தங்கைகள் ஆகியோர் வந்தனர். லோஸ்லியா- கவின் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட குடும்பம் மனம் நொந்து இருந்தது.

நம்பிக்கை துரோகம் செய்த கவின்- கன்னத்தில் அறைந்த கவினின் நண்பர்!!

அந்த நிகழ்விற்குப் பின் கவின் மீதான கோபம் பார்வையாளர்களிடம் அதிகரித்து வருகிறது, அதிக அளவில் எதிர்ப்பினை சம்பாதித்து வருகிறார் கவின்.

லாஸ்லியாவும் நேற்று கவினை அழைத்து, “இனி காதல் ஏதும் வேண்டாம், விளையாட்டில் கவனம் செலுத்தலாம், இது முடிஞ்சிடுச்சு” என்று கூறிவிட்டார்.

இன்று 11 மணிக்கு வெளியான முதல் ப்ரோமோவில், கவின் குடும்பம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் வரவில்லை அவர்களுக்கு பதிலாக அவருடைய நண்பர் வந்திருந்தார்.

திடீரெனக் கோபமான அவர் நண்பர், “இந்த வீட்டில் விளையாட்டினை விளையாடாமல், வீட்டில் உள்ள அனைவரையும் காயப்படுத்தியதற்கும், உன்னை நம்பியோரை கைவிட்டதற்கும், நான் உன்னை அறைகிறேன்” என்று கூறி அறைகிறார்.

இதற்கு சேரன், ஷாக்சி, லாஸ்லியா ஆதரவாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த வாரம் முழுதும் கவினுக்கு சுத்தமா நேரம் சரியில்லை என்பது மட்டும் தெளிவாகிறது.

From around the web