வந்த சூழ்நிலையினை மறந்த கவின்!!!

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி வெற்றிகரமாக பயணிக்கிறது. வந்ததுமுதல் எந்த வேலை ஒருபுறம் நடந்தாலும், கவினுடைய காதல் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும். ஒரே நேரத்தில் சாக்ஷி மற்றும் லாஸ்லியாவுடன் காதல், சேரன்மீது வெறுப்பு, மதுமிதாவினை மறைமுகமாகத் தாக்குதல், கஸ்தூரியை மரியாதை இன்றி நடத்துதல் என இவரின் நடத்தையால் பார்வையாளர்கள் பலரும் இவர் மீது தவறான எண்ணத்தை மட்டுமே கொண்டுள்ளனர். இவரைப் பற்றி சர்ச்சைகள் தொடர்ந்தநிலையில், கவினின் தாயார் சீட்டு கம்பெனி நடத்துவதாக கூறி பண மோசடியில்
 
வந்த சூழ்நிலையினை மறந்த கவின்!!!

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி வெற்றிகரமாக பயணிக்கிறது. வந்ததுமுதல் எந்த வேலை ஒருபுறம் நடந்தாலும், கவினுடைய காதல் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும்.

ஒரே நேரத்தில் சாக்ஷி மற்றும் லாஸ்லியாவுடன் காதல், சேரன்மீது வெறுப்பு, மதுமிதாவினை மறைமுகமாகத் தாக்குதல், கஸ்தூரியை மரியாதை இன்றி நடத்துதல் என இவரின் நடத்தையால் பார்வையாளர்கள் பலரும் இவர் மீது தவறான எண்ணத்தை மட்டுமே கொண்டுள்ளனர்.

வந்த சூழ்நிலையினை மறந்த கவின்!!!

இவரைப் பற்றி சர்ச்சைகள் தொடர்ந்தநிலையில், கவினின் தாயார் சீட்டு கம்பெனி நடத்துவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ள வழக்கில், திருச்சி நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

வழக்குத் தொடரப்பட்ட நிலையில்தான் கவின் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார், ஆனால் வந்த வேலையினை மறந்து இத்தகைய நெருக்கடியான சூழலிலும் காதல் செய்த வண்ணம் சுற்றி வருவது குறித்து பார்வையாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.

கமல் ஹாசன் தோன்றும் இறுதி வாரங்களில் அமைதியாக இருப்பதும், அதன்பின்னர் தன்னுடைய வேலையினைக் காட்டுவதுமாக இருந்து வருகிறார் கவின்.

அதுவும் இந்த வாரம் கமல் ஹாசன் அவரை வார்ன் செய்த பின்னரும் அவர் அடங்கியதாகத் தெரியவில்லை.

From around the web