காதலிக்காக ஷெரினிடம் சண்டை போட்ட கவின்!

பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை நெருங்க மிக வேகமாக பயணித்துக் கொண்டுள்ளது.. டிக்கெட் டூ ஃபினாலேவின் 8ஆவது டாஸ்க்கினை பிக் பாஸ் கொடுத்தார். அதாவது, ஒரு கூடையில் பந்து போடும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. சிவப்பு, மஞ்சள், பச்சை, வெள்ளை நிற பந்துகள் அடிப்படையில், அதிக மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அடுத்தவர்கள் கூடையில் இருந்து பந்தை எடுக்கும் போது அவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. அப்படி, முகின் கூடையில் இருந்து பந்தை எடுத்த போது, சாண்டியால் லோஸ்லியா கீழே
 
காதலிக்காக ஷெரினிடம் சண்டை போட்ட கவின்!

பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை நெருங்க மிக வேகமாக பயணித்துக் கொண்டுள்ளது..

டிக்கெட் டூ ஃபினாலேவின் 8ஆவது டாஸ்க்கினை பிக் பாஸ் கொடுத்தார். அதாவது, ஒரு கூடையில் பந்து போடும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. சிவப்பு, மஞ்சள், பச்சை, வெள்ளை நிற பந்துகள் அடிப்படையில், அதிக மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அடுத்தவர்கள் கூடையில் இருந்து பந்தை எடுக்கும் போது அவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. அப்படி, முகின் கூடையில் இருந்து பந்தை எடுத்த போது, சாண்டியால் லோஸ்லியா கீழே விழுந்தார்.

காதலிக்காக ஷெரினிடம் சண்டை போட்ட கவின்!இதனை பார்த்த கவின்,  சாண்டியிடம் சண்டையிட்டார். அதன்பின்னர் லோஸ்லியாவிடம் வந்து நலம் விசாரித்தார் கவின், அப்போது ஷெரின், கவின் கூடையில் இருந்த பந்துகளை எடுத்துக் கொண்டார்.

இதனால் இவர்கள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. கவினும் விட்ட பாடில்லை, லாஸ்லியாவிற்காக சண்டைப் போட்டார், லாஸ்லியா, “கவின் விடு இந்தப் பிரச்சினையை” என்று கூறிக் கொண்டிருந்தார்.

டாஸ்க் செய்வதைவிட, இவர்கள் காதல் செய்வதே அதிகமாக உள்ளது என எல்லோரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

From around the web