ஒரே நேரத்தில் ஐந்து ஆந்தாலஜி படங்களை இயக்கும் கௌதம் மேனன்: பரபரப்பு தகவல்

 

இயக்குனர் கௌதம் மேனன் ஏற்கனவே இமைபோல் காக்க, துருவ நட்சத்திரம் ஆகிய திரைப்படங்களை இயக்கி வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி வேட்டையாடு விளையாடு மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய படங்களின் இரண்டாம் பாகம் இயக்க திட்டமிட்டுள்ளார் என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் அவர் தற்போது 5 ஆந்தாலஜி திரைப்படங்களை ஓடிடிக்காக இயக்கி வருவதாக தகவல்கள் வெளிவந்தது அது குறித்த தகவல்கள் தற்போது பார்ப்போம்


மணிரத்னம் உள்பட ஐந்து இயக்குனர்கள் இயக்கும் நவரசா என்ற ஆந்தாலஜி படத்தில் கெளதம் மேனன். இது நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது

வெற்றிமாறன், சுதா கொங்காரா உள்பட ஐந்து இயக்குனர்களின் ஆந்தாலஜி படத்தில் கெளதம் மேனன். இது நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது

பா ரஞ்சித், வெங்கட்பிரபு உள்பட ஐந்து இயக்குனர்களின் ஆந்தாலஜி படத்தில் கெளதம் மேனன். இதுவும் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது

வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் குட்டி லவ் ஸ்டோரி என்ற ஆந்தாலஜி படத்தையும் கெளதம் மேனன் இயக்கி வருகிறார்

கார்த்திக் சுப்புராஜ், ராஜீவ் மேனன் உள்பட ஐந்து இயக்குனர்களின் ஆந்தாலஜி படத்தில் கெளதம் மேனன். இதுவும் அமேசானில் வெளியாகவுள்ளது

From around the web