முதல்முறையாக இணையும் வெற்றிமாறன் - கெளதம் மேனன்

 
முதல்முறையாக இணையும் வெற்றிமாறன் - கெளதம் மேனன்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் உள்ள வெற்றிமாறன் மற்றும் கெளதம் மேனன் ஆகிய இருவரும் ஒரே படத்தில் இணைந்து உள்ளது கோலிவுட் திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

வெற்றிமாறன் தற்போது சூரி நடிக்கும் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 

vetrimaran

இந்த நிலையில் வெற்றிமாறனின் விடுதலை படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் கெளதம் மேனனும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. வெற்றிமாறன் படத்தில் முதல்முறையாக கௌதம் மேனன் நடிக்க இருப்பது இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இளையராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறன் சூர்யா நடிக்கும் வாடிவாசல் என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web