கேப்ரில்லா கேப்டன் ஆனால் ஷிவானிக்கு சிக்கலா?

 

இந்த வாரம் நடைபெற்ற பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கில் திடீரென பாலாஜி மற்றும் கேப்ரில்லா ஆகிய இருவரிடையே சண்டை வந்தது என்பது தெரிந்ததுதான். இருவரும் ஆரம்ப நாள் முதல் நெருக்கமாக நட்புடன் இருந்த நிலையில் திடீரென ஒரே ஒரு ’ஹானஸ்ட்’ பிரச்சனையால் சண்டை வந்தது என்பதும் அதிலும் பாலாஜியை சுசி மற்றும் சம்யுக்தா ஏற்றி விட்டதால் தான் சண்டை வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் பாலாஜி மற்றும் கேப்ரில்லா சண்டை விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென ஷிவானி குறுக்கே வந்ததால் ஷிவானிக்கும் கேப்ரில்லாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது இந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

gabrilla

இந்த நிலையில் இன்றைய புரொமோ வீடியோவில் கேப்ரில்லா கேப்டனானது உறுதியாகியுள்ளது. அடுத்த வாரம் கேப்ரில்லா பிக்பாஸ் வீட்டின் கேப்டன் ஆனால் ஷிவானிக்கு சிக்கல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் கேப்டன் பதவியை பயன்படுத்தி தங்களுக்கு பிடிக்காதவர்களை வறுத்தெடுத்து வருகின்றனர் என்பதும் இந்த வாரம் ஆரி, சனம் ஷெட்டியை வறுத்தெடுத்து வருகிறார் என்பதும் தெரிந்ததே 

அடுத்த வாரம் ஷிவானி கேப்ரில்லாவிடம் என்ன பாடு படப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


 

From around the web