மறைந்த வடிவேல் பாலாஜி யின் இறுதி ஊர்வலம் தொடங்கியது: ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி!

நேற்று உடல் நலக்குறைவு காரணமாக பிரபல காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம் அடைந்தது சின்னத்திரை உலகை மட்டுமின்றி பெரிய திரை உலகில் உள்ள நட்சத்திரங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது
 

நேற்று உடல் நலக்குறைவு காரணமாக பிரபல காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம் அடைந்தது சின்னத்திரை உலகை மட்டுமின்றி பெரிய திரை உலகில் உள்ள நட்சத்திரங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் வடிவேல் பாலாஜி மறைவிற்கு தங்கள் இரங்கலை தெரிவித்தனர்

விஜய் சேதுபதி உள்ளிட்ட ஒரு சில நட்சத்திரங்கள் அவரது வீட்டிற்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்கள் என்பதும் அவரது குடும்பத்திற்கு நிதி உதவியும் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மறைந்த நடிகர் வடிவேலுவின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த் நிலையில் சற்று முன்னர் இறுதி ஊர்வலம் தொடங்கியது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அவருடைய முகத்தை கடைசியாக பார்த்து கதறிய காட்சி காண்போர் நெஞ்சை உருக்கியது 

வடிவேல் பாலாஜி இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்களும் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது அவரது உடல் நுங்கம்பாக்கம் மயானத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. ஆம்புலன்சில் இருபுறங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

From around the web