லக்‌ஷூரி பட்ஜெட் டாஸ்க்கில் முழு மதிப்பெண்ணையும் பெற்ற போட்டியாளர்கள்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி வெற்றிகரமாக பயணிக்கிறது. 16 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில் சேரன், கவின், தர்ஷன், முகென், சாண்டி, வனிதா, ஷெரின், லோஸ்லியா என பாதியாகக் குறைந்து 8 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வார லக்ஷூரி பட்ஜெட் டாஸ்க்காக பொம்மலாட்டம், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு ஆகியவை நடத்தப்பட்டது. இதனை கிராமப்புற கலை நிகழ்ச்சிகளை உலகெங்கிலும் அரங்கேற்றிய காளீஸ்வரன் அய்யா அவர்களும், அவரது குழுவினரும் வந்து கற்பித்தனர். பிக் பாஸ் போட்டியாளர்களும் டைட்டிலை வின் பண்ண வேண்டும்
 
லக்‌ஷூரி பட்ஜெட் டாஸ்க்கில் முழு மதிப்பெண்ணையும் பெற்ற போட்டியாளர்கள்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி வெற்றிகரமாக பயணிக்கிறது. 16 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில் சேரன், கவின், தர்ஷன், முகென், சாண்டி, வனிதா, ஷெரின், லோஸ்லியா என பாதியாகக் குறைந்து 8 போட்டியாளர்கள் உள்ளனர்.

இந்த வார லக்‌ஷூரி பட்ஜெட் டாஸ்க்காக பொம்மலாட்டம், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு ஆகியவை நடத்தப்பட்டது. இதனை கிராமப்புற கலை நிகழ்ச்சிகளை உலகெங்கிலும் அரங்கேற்றிய காளீஸ்வரன் அய்யா அவர்களும், அவரது குழுவினரும் வந்து கற்பித்தனர்.

லக்‌ஷூரி பட்ஜெட் டாஸ்க்கில் முழு மதிப்பெண்ணையும் பெற்ற போட்டியாளர்கள்!!

பிக் பாஸ் போட்டியாளர்களும் டைட்டிலை வின் பண்ண வேண்டும் என்ற வெறியோடு அதனை சிறப்பாக கற்றுக் கொண்டதோடு, மிகச் சிறப்பாக அரங்கேற்றினர்.

இது பார்வையாளர்களை அசத்தவே செய்தது, காளீஸ்வரன் அய்யா அவர்களின் குழுவும் வெகு சீக்கிரத்திலேயே இவர்கள் கற்றுக்கொண்டதற்கு பாராட்டுகள் தெரிவித்தார். அதற்கான மரியாதைகளும் செய்யப்பட்டது.

சமீபகாலமாக லக்‌ஷூரி பட்ஜெட் டாஸ்க்கின் மதிப்பெண்ணில் இழப்பினை மட்டுமே சந்தித்த போட்டியாளர்கள், முதல் முறையாக சிறப்பான பாராட்டுகளுடன், 1600 மதிப்பெண்களையும் முழுமையாகப் பெற்றுள்ளனர்.

இதனால் போட்டியாளர்கள் பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர். மிகச் சிறப்பாக இந்தப் போட்டியில் பங்கேற்றவர்களாக சேரன், முகின், வனிதா தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

From around the web