கொடைக்கானலில் கமலுக்கு பாதுகாப்பு

கமல்ஹாசன் இரண்டு நாட்களுக்கு முன் இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து என்று சொன்னாலும் சொன்னார். அனைத்து செய்திகளிலும் , சமூக வலைதளங்களிலும், அவரை பற்றிய பேச்சுத்தான் நிற்காமல் சென்று கொண்டிருக்கிறது. இது போதாதென்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் அவர் நாக்கை அறுக்க வேண்டும் அவர் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளவர் என கொளுத்தி போட , மக்கள் நீதி மய்யமும் அறிக்கை அனுப்பி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என
 

கமல்ஹாசன் இரண்டு நாட்களுக்கு முன் இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து என்று சொன்னாலும் சொன்னார். அனைத்து செய்திகளிலும் , சமூக வலைதளங்களிலும், அவரை பற்றிய பேச்சுத்தான் நிற்காமல் சென்று கொண்டிருக்கிறது.

கொடைக்கானலில் கமலுக்கு பாதுகாப்பு

இது போதாதென்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் அவர் நாக்கை அறுக்க வேண்டும் அவர் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளவர் என கொளுத்தி போட , மக்கள் நீதி மய்யமும் அறிக்கை அனுப்பி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

மய்யம் சார்பில் கவிஞர் சினேகன் தொடர்ந்து இந்த பேச்சுகளுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார். மேலும் தங்களிடம் நம்மவர் படை உண்டு என்றும் சொல்லி வருகிறார்.

கமல் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கமல் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்து அமைப்புகள் கமலை எதிர்த்து வருவதால் கொடைக்கானலில் கமல் தங்கி இருக்கும் விடுதியிலும் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளது காவல்துறை.

From around the web