இன்று முதல் தொடங்குகிறது. ‘சர்கார்’ டப்பிங்

இளையதளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த படத்தின் வசனக்காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் இன்றுமுதல் டப்பிங் பணிகள் தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இன்று விஜய் தனது காட்சிகளின் டப்பிங் பணியை தொடங்குவதாகவும், அவர் இன்னும் ஓரிரு நாட்களில் தனது டப்பிங் பணியை முடித்துவிடுவார் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். டப்பிங் பணிகள் முடிவடைந்த பின்னர் படக்குழு அமெரிக்கா செல்லவுள்ளதாகவும், அங்கு ஒரு பாடல் மற்றும் ஒருசில
 

இன்று முதல் தொடங்குகிறது. ‘சர்கார்’ டப்பிங்

இளையதளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த படத்தின் வசனக்காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் இன்றுமுதல் டப்பிங் பணிகள் தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இன்று விஜய் தனது காட்சிகளின் டப்பிங் பணியை தொடங்குவதாகவும், அவர் இன்னும் ஓரிரு நாட்களில் தனது டப்பிங் பணியை முடித்துவிடுவார் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

டப்பிங் பணிகள் முடிவடைந்த பின்னர் படக்குழு அமெரிக்கா செல்லவுள்ளதாகவும், அங்கு ஒரு பாடல் மற்றும் ஒருசில ஆக்சன் காட்சிகள் படமாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இன்று முதல் தொடங்குகிறது. ‘சர்கார்’ டப்பிங்

விஜய், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளது.

From around the web