தல தளபதி மாதிரி நம்மளும் கலக்குவோம்ல... ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங் திரைப்படமான ஃப்ரண்ட்ஷிப் Friendship Day விருந்தாக வருகின்றது.
 

ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் எழுதி இயக்கும் ஃப்ரண்ட்ஷிப் எனும் தமிழ் திரைப்படத்தில் ஹர்பஜன் சிங் முதல் முறையாக நடிகராக அறிமுகமாகிறார்.

2018ல் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் யாவும் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அர்ஜூன் வில்லனாக நடிக்கும் இப்படத்தில் லாஸ்லியா நடிக்கிறார்.  காமெடி நடிகர் சதீஷூம், விஜய் டிவி கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலாவும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் பாடல் காட்சி ஒன்றில் ஹர்பஜனுடன் இணைந்து சதீஷ், பாலா மற்றும் லாஸ்லியா ஆடும் புகைப்படங்கள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

இதை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஹர்பஜன், “தமிழனின் தாய்மடி #கீழடி #தமிழ்நாடு என்னை அரவணைக்கும் ஒரு அன்னைமடி! எந்த சொல்லிலும் அடங்காது வேஷ்டி கட்டிய தருணம். இந்த Summer நம்ம படம் #Friendship வருது #தளபதி #தல படம் மாதிரி நீங்க கொண்டாடலாம்” என பதிவிட்டுள்ளார்.


 

From around the web