தோனிக்காக வீட்டையே மஞ்சளாக மாற்றிய வெறித்தனமான ரசிகர்!

 

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் தோனி சரியாக விளையாடவில்லை என்றும் அணியையும் திறமையாக நடத்திச் செல்லவில்லை என்றும் குற்றச்சாட்டு உள்ளது. இருப்பினும் தோனி மீதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீதும் இருக்கும் ரசிகர்களின் அன்பு கொஞ்சம் கூட மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

தோல்வி அடைந்த போது தோனியை ரசிகர்கள் திட்டினாலும் சென்னை அணி ரசிகர்கள் வேறு அணி ரசிகர்களாக மாற மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி என்ற பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்ற தோனியின் தீவிர ரசிகர் ஒருவர் தனது வீட்டையே சிஎஸ்கே அணியின் மஞ்சள் நிறத்திற்கு மாற்றியுள்ளார் 
மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் அடித்து சிஎஸ்கே ரசிகர் என்பதை நிரூபிக்க இவர் ஒன்றரை லட்ச ரூபாய் செலவு செய்துள்ளதாகவும் வீட்டின் நான்கு பக்கங்களிலும் தோனியின் புகைப்படங்களை அவர் வரைந்து உள்ளதாகவும் வீட்டின் முன் ’இது தோனியின் ரசிகர் வீடு’ என்றும் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த வீட்டை அந்த பகுதியில் உள்ளவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

From around the web