தமிழ் சினிமாவிலேயே முதல்முறை: ‘மாநாடு’ தயாரிப்பாளர் அசத்தல்!

 

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிவரும் மாநாடு படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 

இன்று புதுவையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது சிம்பு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் எதிர்பார்த்ததைவிட அதிக ஷாட்கள் என்று படமாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

maanadu

இந்த நிலையில் மாநாடு படத்தின் படக்குழுவினர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பால் எந்தவித பிரச்சனையும் ஏற்படக்கூடாது என்பதற்காக மூலிகை தேனீர் வழங்கப்பட்டு வருவதாகவும் ஒருவேளைக்கு மூலிகை உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது 

தமிழ் சினிமாவில் முதல்முறையாக கொரோனா வைரஸ் பாதுகாப்புக்காக மூலிகை தேநீரும் உணவும் கொடுப்பது மாநாடு படக்குழுவினர் மட்டுமே என்ற தகவல் அந்த படக்குழுவினருக்கு பெருமையான ஒன்றாகும் 

இந்த மூலிகைத் தேனீர், உணவை சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பாதிப்பு சுத்தமாக இருக்காது என்று நம்பப்படுவதால் பயமின்றி மாநாடு படக்குழுவினர் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web