ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்க, குறுக்க பேசாதீங்க: ரம்யாவுக்கு ஆரி கொடுத்த பதிலடி!

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரி ஆரம்பம் முதலே சூப்பராக விளையாடி வருகிறார் என்பதும் அவருக்கு ஈடு இணையாக விளையாடுவதில் அந்த வீட்டில் யாருமே இல்லை என்பதுதான் அனைவரின் கருத்தாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் ’டிக்கெட் டு ஃபினாலே’ டாஸ்கின் இறுதிகட்டத்தில் யாருக்கு எந்த வாக்கியம் பொருந்துகிறது என்பது குறித்து ஹவுஸ்மேட்ஸ் பேசி வருகின்றனர்.

aari ramya

இந்த நிலையில் இன்றைய முதலில் புரமோவில் ஆரிக்கு வந்த ஒரு வாக்கியம் குறித்து கூறும்போது ’ரம்யா என்னை பற்றி ஒரு கருத்து கூறினார், நான் சேஃப்கேம் விளையாடுகிறேன் என்றும் அவர் கூறினார் என்று கூற, அப்போது ரம்யா நான் சேஃப்கேம் என்று சொல்லவில்லை, ஒன்சைடு என்றுதான் கூறினேன் என்று கூறினார் 

அப்போது ஆரி நிதானத்துடன், ‘நான் பேசும்போது தயவுசெய்து குறுக்கே பேசாதீர்கள். அதுதான் ரூல்ஸ். ரூல்ஸை தயவுசெய்து ஃபாலோ பண்ணுங்க. உங்களிடம் இருக்கும் மிகப்பெரிய குறை இதுதான். உங்களைப் பற்றி ஒரு குறை சொல்லும்போது அதை நீங்கள் ஏற்று கொள்ளாமல் குறுக்கே பேசுகிறீர்கள். குறைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருக்க வேண்டும் என்றும் பதிலடி கொடுக்கிறார். அதன் பிறகு ரம்யா அமைதியாகி விடுகிறாள் 

ஆரி பேசும்போது குறுக்கே பேசிய ரம்யாவுக்கு பதிலடி கொடுத்த ஆரியை வழக்கம்போல் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web