ஆரியை முதன் முறையாக கட்டியணைத்த மற்ற போட்டியாளர்கள்.... என்ன காரணம் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக இறுதி போட்டியை நோக்கி நகர்ந்து வருகிறது,
 

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக இறுதி போட்டியை நோக்கி நகர்ந்து வருகிறது, மேலும் இந்த முறை யார் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல போகிறார் என எதிர்பார்த்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் டிக்கெட் டூ பைனல்ஸ் டாஸ்க் நடந்து வருகிறது, இதில் அதிக புள்ளிகளோடு ரியோ முன்னிலையில் உள்ளார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், டாஸ்க் ஒன்றில் ஆரி "இதற்கு விளக்கம் அளிக்க விரும்பவில்லை, ஏன்னென்றால் காலத்தை அழிக்காதே என்ற பட்டத்தை தான் எனக்கு கொடுத்துளீர்கள்" என கூறியுள்ளார்.

இதனையடுத்து ரியோ மற்றும் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் அவர் இதுபோல் செய்தது முதல்முறை என அவரை கட்டியணைத்து கொண்டாடியுள்ளனர்.

From around the web