தமிழகத்தில் இன்று முதல் தியேட்டர்கள் திறப்பு: பெங்களூரு நிலைமை ஆகுமா?

 

தமிழகத்தில் நவம்பர் 10ஆம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்தது என்பதும் திரையரங்குகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு தெரிவித்தது என்பதும் தெரிந்ததே 

50 சதவீத இருக்கைகளில் மட்டும் பார்வையாளர்களுக்கு அனுமதி, பார்வையாளர்கள் அனைவருக்கும் சானிடைசவர் வசதி மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம் உள்பட ஒரு சில வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது 

theaters

இந்த நிலையில் நேற்று முதலே பல முக்கிய மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இன்று முதல் திறக்கப்படும் தியேட்டர்களில் பார்வையாளர்களின் கூட்டம் எந்த அளவுக்கு வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் 
சமீபத்தில் பெங்களூரில் திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் 10% பார்வையாளர்களாக கூட வரவில்லை என்பதால் பெங்களூரில் உள்ள பெரும்பாலான திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம்.

புதிய திரைப்படங்கள் வெளிவராதது ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும் கொரோனா வைரஸ் பயம் காரணமாக தியேட்டருக்கு வருவதற்கு பொதுமக்கள் யோசித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி குறைந்த செலவில் ஓடிடியில் வீட்டில் இருந்துகொண்டே குடும்பத்தோடு ஜாலியாக திரைப்படம் பார்த்து அனுபவித்து விட்ட பொதுமக்கள் மீண்டும் திரையரங்குகளுக்கு வருவார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் நிலைமை தமிழகத்திற்கு வருமா அல்லது தமிழகத்தில் திரையரங்குகளில் மீண்டும் ரசிகர்களின் கூட்டம் சூடு பிடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web