லண்டனில் சூப்பர் ஸ்டாருடன் மோதும் சூர்யா

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் சூர்யா நடிக்கவுள்ள ‘சூர்யா 37’ படத்தை பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கவுள்ளார் என்ற செய்தி ஏற்கனவே அறிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சூர்யா, மோகன்லால் மோதும் ஆக்சன் காட்சிகள் இந்த படப்பிடிப்பில் படமாக்கப்படவுள்ளதாகவும், இந்த காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. சூர்யா, மோகன்லால், அல்லு சிரிஷ் நடிக்கும் இந்த படத்தில் இரண்டு பிரபல நாயகிகள்
 

லண்டனில் சூப்பர் ஸ்டாருடன் மோதும் சூர்யா

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் சூர்யா நடிக்கவுள்ள ‘சூர்யா 37’ படத்தை பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கவுள்ளார் என்ற செய்தி ஏற்கனவே அறிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சூர்யா, மோகன்லால் மோதும் ஆக்சன் காட்சிகள் இந்த படப்பிடிப்பில் படமாக்கப்படவுள்ளதாகவும், இந்த காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

லண்டனில் சூப்பர் ஸ்டாருடன் மோதும் சூர்யாசூர்யா, மோகன்லால், அல்லு சிரிஷ் நடிக்கும் இந்த படத்தில் இரண்டு பிரபல நாயகிகள் நடிக்கவுள்ளதாகவும் இதுகுறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படம் வரும் 2019ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் ‘என்.ஜி.கே’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், விரைவில் இந்த படத்தின் புராமோஷன் பணிகள் தொடங்கவுள்ளதாகவும், இந்த படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

From around the web