நாளை வெளியாகிறது "பஸ்ட் லுக் போஸ்டர்"!

கர்ணன் படத்தின் "ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்" மற்றும் "ரிலீசாகும் தேதி" நாளை வெளியாகும் என்று கூறுகிறார் "கலைப்புலி எஸ் .தாணு"!
 
"கலைப்புலி எஸ். தாணுவின்" ட்விட்டர் பக்கம் கூறும் தகவல்

சில நாள்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி திரையில் வந்த "அசுரன்" என்ற திரைப்படம் மிகுந்த வரவேற்ப்பை பெற்று பிளாக்பஸ்டர் அடித்தது. தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "கர்ணன்". இத்திரைப்படத்தில் பிரபல இயக்குனர் "மாரி செல்வராஜ்" இயக்கியுள்ளார்.மாரி செல்வராஜ் இயக்கத்தில்  தனுஷ் நடித்திருக்கும் கர்ணன் திரைப் படத்திற்கு "சந்தோஷ் நாராயணன்" இசையமைத்துள்ளார்.நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள "ஜகமே தந்திரம்" என்ற திரைப்படம் திரையில் வெளியாகுமா என்ற குழப்பம் நிலவி வரும் நிலையில் தற்போது கர்ணன் படத்தின் வெளியீட்டு தேதியை நாளை அறிவிப்பதாக  கலைப்புலி எஸ் .தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

karnan

மேலும் அவர் நாளை காலை 11 மணி 6ம் நிமிடத்தில் இப்படத்தின் "பர்ஸ்ட் லுக் போஸ்டரும்" வெளியாகும் என கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் கொடுத்துள்ளது."ஜகமே தந்திரம்" திரைப்படம் பற்றிய குழப்பத்தில் இருந்த தனுஷ் ரசிகர்களுக்கு இது ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்த உள்ளதாக கூறப்படுகிறது .

"நாளை காலை 11:06 மணிக்கு # கர்னனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் நாடக வெளியீட்டு தேதி அறிவிப்பை நாங்கள் உங்களிடம் கொண்டு வருகிறோம். தயாராக இரு!" இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் கலைப்புலி எஸ்.தாணு.

From around the web