விரைவில் வெளியாகும் "பர்ஸ்ட் லுக் "

தல அஜித்தின் வலிமை படத்தின் "ஃபர்ஸ்ட் லுக் " விரைவில் வெளியாகும்
 
புரொடியூசர் போனிகபூரின் ட்விட்டர் பக்கம் கூறும் தகவல்!

தனது நடிப்பாலும் தனது திறமையாலும் இன்று மிகப்பெரிய நட்சத்திரமாகும் ,தல என்று அழைக்கப்படும் வருகிறார் பிரபல நடிகர் "அஜித்குமார்". ஆரம்பத்தில் "அல்டிமேட் ஸ்டார்" என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது "தல அஜித்" என்று  மக்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகிய "வில்லன்"என்ற திரைப்படம் இவருக்கு ஒரு மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது. அத்திரைப்படத்தில் நடிகர் அஜித் "இரு வேடங்களில்" நடித்திருப்பார்.

thala ajith

இவர் நடிப்பில் வெளியாகிய "ஆரம்பம்" என்ற திரைப்படம் இவருக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. திரைப்படத்தில் இவருடன் "லேடி சூப்பர் ஸ்டார்" நயன்தாரா நடித்திருப்பார். நயன்தாரா மற்றும் இவரின் கூட்டணியில் உருவாகி வெளியான இப்படத்தில் பிரபல நடிகர் "ஆர்யா" நடித்து இருப்பார். இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தல அஜித் நடித்த  "மங்காத்தா" என்ற திரைப்படம் வசூல் ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. மேலும் இப்படத்தில் இவருடன் "ஆக்சன் கிங் அர்ஜுன்" நடித்து இருப்பார். மேலும் இத்திரைப்படத்தில் கனவுக் கன்னியான நடிகை திரிஷா நடித்திருப்பார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

பின்னர் தல அஜித் நடிப்பில் வெளியாகிய "வீரம்"," வேதாளம்" போன்ற திரைப்படங்கள் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தற்போது நடிகர் அஜித் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படமான "வலிமை" என்ற திரைப்படத்தின் "அப்டேட்" எப்பொழுது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், அத்திரைப்படத்தின் புரொடியூசரும் ,நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான "போனி கபூர்" இத்திரைப்படத்தின் "பர்ஸ்ட் லுக்"விரைவில் வெளியாகும் என தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறிய தகவல் மூலம் தல அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆனந்தத்திலும் ,கொண்டாட்டத்திலும் உள்ளனர்.

From around the web