ஃபினாலே டாஸ்க்;  முன்னணியில் உள்ள போட்டியாளர் யார்?

 

பிக்பாஸ் வீட்டில் தற்போது முக்கிய டாஸ்க்கான ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த டாஸ்க்கில் அனைத்து சுற்றிலும் சேர்ந்து அதிக மதிப்பெண் எடுக்கும் ஒருவர் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது

இதனை அடுத்து இந்த டாஸ்க்கில் வெற்றி பெற அனைத்து போட்டிகளிலும் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். நேற்று நடந்த முதல் சுற்றில் 7 புள்ளிகள் எடுத்து பாலாஜி முதலிடத்தில் இருந்தார். எனவே அவர் இறுதி போட்டிக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக கருதப்பட்ட நிலையில் இரண்டாவது சுற்றில் வெறும் இரண்டு புள்ளிகள் மட்டுமே பாலாஜி எடுத்தார்

biggboss

தற்போதைய நிலையில் இரு சுற்றுகளில் தலா 6 புள்ளிகள் என மொத்தம் 12 புள்ளிகள் எடுத்த ரியோ முதலிடத்திலும், ரம்யா 10 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். மேலும் ஆரி மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் தலா 9 புள்ளிகள் எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் மூன்று புள்ளிகள் மட்டுமே எடுத்து கேபி கடைசி இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இன்னும் மூன்று சுற்றுகள் உள்ள நிலையில் இந்த ஐந்து சுற்றுகளிலும் சேர்ந்து அதிக மதிப்பெண் எடுப்பது யார்? நேரடியாக இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவது யார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web