அடுத்தவாரம் படப்பிடிப்பு, ஜனவரியில் ரிலீஸ்: சிம்பு படம் குறித்த புதிய அப்டேட் 

 

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக உள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு 30 நாட்களில் முடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் வெளிவந்த செய்தி கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

இந்த நிலையில் திண்டுக்கல்லில் அடுத்த வாரம் சிம்பு-சுசீந்திரன் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் இம்மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக ஒரே ஷெட்யூலில் முடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது

தற்போது கேரளாவில் உடற்பயிற்சி செய்து உடலை ஸ்லிம்மாக மாற்றியுள்ள சிம்பு இந்த படத்தில் புதிய தோற்றத்தில் காட்சியளிப்பார் என்று ரசிகர்கள் அதனை பார்த்து ஆச்சரியப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது 
அடுத்தவாரம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 30 நாட்களில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு அதன்பின் 60 நாட்களில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்து வரும் ஜனவரியில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்

சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் சிம்புவின் சம்பளம் இல்லாமல் இரண்டு கோடி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது

From around the web