பிலிம்பேர் விருது-ரன்பீர் கபூர், ஆலியா பட் தேர்வு

இந்தாண்டுக்கான பிலிம்பேர் விருதுக்கு சிறந்த நடிகையாக ஆலியா பட்டும், சிறந்த நடிகராக ரன்பீர் கபூரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மும்பையில் நடைபெற்ற 64 வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்க வந்த நடிகைகள் ஆலியா பட், ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, கத்ரினா கபூர், சோனம் கபூர், தீபிகா படுகோன், சன்னி லியோன் உள்பட பலர் விதவிதமான ஆடைகளுடன் போஸ் கொடுத்தனர். RAAZI படத்தில் நடித்தற்காக ஆலியா பட் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டார். பதாய் ஹோ படத்தில்
 

இந்தாண்டுக்கான பிலிம்பேர் விருதுக்கு சிறந்த நடிகையாக ஆலியா பட்டும், சிறந்த நடிகராக ரன்பீர் கபூரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பிலிம்பேர் விருது-ரன்பீர் கபூர், ஆலியா பட் தேர்வு

மும்பையில் நடைபெற்ற 64 வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்க வந்த நடிகைகள் ஆலியா பட், ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, கத்ரினா கபூர், சோனம் கபூர், தீபிகா படுகோன், சன்னி லியோன் உள்பட பலர் விதவிதமான ஆடைகளுடன் போஸ் கொடுத்தனர்.

RAAZI படத்தில் நடித்தற்காக ஆலியா பட் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டார். பதாய் ஹோ படத்தில் முதுமைகாலத்தில் பிள்ளைப்பேறு அடையும் பெண்ணின் மன உளைச்சலை சித்தரித்த நீனா குப்தா விமர்சகர்கள் விருதுக்கு தேர்வு பெற்றார்.

சஞ்சய் தத்தின் வாழ்க்கையை சித்தரித்த படத்தில் நடித்த ரன்பீர் கபூர் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டார். பத்மாவத் படத்தில் நடித்த ரன்வீர்சிங் சிறந்த நடிகராக விமர்சகர்களின் விருதுக்கு தேர்வு பெற்றார்.

அந்தா துன் படத்தில் பார்வை தெரியாதவராக நடிக்கும் ஒரு இசைக்கலைஞன் இரண்டு கொலைகளை நேரில் காணும் சாட்சியாக இருப்பதை சித்தரிக்கும் பாத்திரத்தில் நடித்த ஆயுஷ்மன் குரானா சிறந்த நடிகராக விமர்சகர்களுக்கான விருது பெற்றார்

raazi படத்தை இயக்கிய குல்சாரின் மகள் மேக்னா குல்சார் சிறந்த இயக்குனராக தேர்வு செய்யப்பட்டார். இப்படமே சிறந்த படமாகவும் தேர்வு செய்யப்பட்டது. சிறந்தபடத்திற்கான விமர்சகர்கள் விருது அந்தாதுன் படத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த புதுமுக நடிகையாக கேதர்நாத் படத்தில் நடித்த சாரா அலிகான் தேர்வு செய்யப்பட்டார்

இந்த விழாவில் நடிகை ஹேமாமாலினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

From around the web