டாஸ்க்கில் கவினுக்கும்- தர்ஷனுக்கும் இடையே ஏற்பட்ட சண்டை!!

பிக் பாஸ் நிகழ்ச்சி 90 வது நாளை நெருங்க உள்ள நிலையில், டாஸ்க்குகள் கடுமையாக செல்லும் என்ற எதிர்பார்ப்பினை நிச்சயம் இன்று பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்ப்பு ப்ரோமோவிலேயே தெரிந்தது. பிக் பாஸிடமிருந்து அடுத்த டாஸ்குக்காக அறிவிப்பு வந்தது, “அதாவது கார்டன் ஏரியாவில் மூன்று வட்டங்கள் போடப்பட்டிருக்கும், அங்கு 7 தலையணைகள் வைக்கப்பட்டிருக்கும், அந்த பைகளை மாட்டிக்கொண்டு, வட்டத்திற்குள் சுற்றி, மற்ற போட்டியாளர்களின் கோணிப் பையில் உள்ள தெர்மாகோல் பஞ்சுகளை வெளியேற்ற வேண்டும் என்றார். அதன்படி ஒவ்வொரு
 
டாஸ்க்கில் கவினுக்கும்- தர்ஷனுக்கும் இடையே ஏற்பட்ட சண்டை!!

பிக் பாஸ் நிகழ்ச்சி 90 வது நாளை நெருங்க உள்ள நிலையில், டாஸ்க்குகள் கடுமையாக செல்லும் என்ற எதிர்பார்ப்பினை நிச்சயம் இன்று பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்ப்பு ப்ரோமோவிலேயே தெரிந்தது.

பிக் பாஸிடமிருந்து அடுத்த டாஸ்குக்காக அறிவிப்பு வந்தது, “அதாவது கார்டன் ஏரியாவில் மூன்று வட்டங்கள் போடப்பட்டிருக்கும், அங்கு 7 தலையணைகள் வைக்கப்பட்டிருக்கும், அந்த பைகளை மாட்டிக்கொண்டு, வட்டத்திற்குள் சுற்றி, மற்ற போட்டியாளர்களின் கோணிப் பையில் உள்ள தெர்மாகோல் பஞ்சுகளை வெளியேற்ற வேண்டும் என்றார். 

டாஸ்க்கில் கவினுக்கும்- தர்ஷனுக்கும் இடையே ஏற்பட்ட சண்டை!!

அதன்படி ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு எண் கொடுக்கப்பட்டது, அதன் அடிப்படையில் ஒவ்வொருவராக ஓடத் துவங்கினர், அதில் முதல் ஆளாக சேரன் அவுட் ஆக, அடுத்து தர்சன் அவுட் ஆனார், அடுத்து லாஸ்லியாவும், அதற்கு அடுத்து ஷெரினும் அவுட் ஆகிப் போயினர்.

அதன்பின்னர் சாண்டி, கவின், முகின் ஓட இறுதியில் முகின் போட்டியில் வெற்றி பெற்றார். லாஸ்லியா கீழே விழுந்ததில் அடிபட்டுவிட்டது, அதன்பின்னர் கவின் ஷெரினுக்கும் காலில் ஏதோ சுளுக்கு ஏற்பட்டுவிட்டது.

இதற்கிடையில் கவின்- தர்சன் சண்டை வேறு என பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது.

From around the web