வெளியேறத் தயாரானார் ஃபாத்திமா பாபு!

பிக் பாஸ் சீசன் 3 கடந்த 23ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கடந்த வாரம் தொடர்ந்து மீரா மிதுன் மற்றும் மதுமிதாஆகிய இருவரும் டார்க்கெட் செய்யப்பட்டு வந்தனர். இரண்டாவது வாரத்தை இன்றோடு முடிக்கவுள்ள நிலையில், ஒரு வாரத்திற்கு பிறகு முதல் முறையாக இன்று எலிமினேஷன் நடக்கவுள்ளது. இதில், ஏற்கனவே கேப்டனாக இருந்த வனிதாவும், தற்போது கேப்டனாக இருக்கும் மோகன் வைத்யா ஆகிய இருவரும் இந்த வாரம் வெளியேறப்போவதில்லை என்பது பிக்
 

பிக் பாஸ் சீசன் 3 கடந்த 23ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கடந்த வாரம் தொடர்ந்து மீரா மிதுன் மற்றும் மதுமிதாஆகிய இருவரும் டார்க்கெட் செய்யப்பட்டு வந்தனர்.

இரண்டாவது வாரத்தை இன்றோடு முடிக்கவுள்ள நிலையில், ஒரு வாரத்திற்கு பிறகு முதல் முறையாக இன்று எலிமினேஷன் நடக்கவுள்ளது. இதில், ஏற்கனவே கேப்டனாக இருந்த வனிதாவும், தற்போது கேப்டனாக இருக்கும் மோகன் வைத்யா ஆகிய இருவரும் இந்த வாரம் வெளியேறப்போவதில்லை என்பது பிக் பாஸ் விதி.

வெளியேறத் தயாரானார் ஃபாத்திமா பாபு!

பிக் பாஸ் வீட்டிற்குள் எலிமினேஷன் பட்டியலில் மதுமிதா 6 வாக்குகளும், மீரா மிதுன் 8 வாக்குகளும், சாக்‌ஷி 2, கவின் 2 வாக்குகள், சரவணன் 2 வாக்குகள், சேரன் 2 வாக்குகள் மற்றும் ஃபாத்திமா பாபு 3 வாக்குகளும் பெற்றுள்ளனர். 

வாக்குகள் அடிப்படையில் பார்த்தால், எலிமினேஷனுக்கு அதிகபட்சமாக மீரா மிதுன் தான் 8 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். மக்களின் ஆதரவைப் பொறுத்துத் தான் பட்டியலில் இடம் பெற்றவர்களின் வெளியேற்றம் கணக்கிடப்படுகிறது.

மதுமிதா, கவின், சேரன், சரவணன், சாக்‌ஷி, மீரா மிதுனுக்கு மக்களின் ஆதரவு பெரும்பான்மையாக உள்ளது என்பதில் சந்தேகமில்லை. இந்த நிலையில், மக்களின் ஆதரவை குறைவாக பெற்றுள்ளவர் செய்தி வாசிப்பாளர் ஃபாத்திமா பாபு தான் இந்த வாரம் வெளியேறுவார் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.

From around the web