நித்தி அகர்வாலுக்கு கோவில் கட்டிய ரசிகர்கள்

காதலர் தினத்தன்று சென்னையில் நித்தி அகர்வாலுக்கு ஒரு கோயில் கட்டினர்
 

நடிகர் நிதி அகர்வால் கோலிவுட்டில் இரண்டு படங்கள் மட்டுமே நடித்து முடித்துள்ளார். ஆனால் அவருக்கு ரசிகர்கள் சிலர் கோயில் கட்டி, ஆர்த்தி பூஜை செய்து, நித்தி சிலைக்கு சிறப்பு பூஜை செய்துள்ளனர்.

இந்த புகைப்படங்கள் சமீபத்தில் வைரலானது. ஆம் ரசிகர்கள் சிலர் காதலர் தினத்தன்று சென்னையில் அவருக்கு ஒரு கோயில் கட்டினர். மேலும் அவரது சிலைக்கு ரசிகர்கள் அபிஷேகம் செய்து, கேக் வெட்டி கொண்டாடினர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. டிவிட்டரில் ஹேஷ்டேக் #NationalCrush என்றும் டிரெண்ட் ஆனது.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நித்தி, தனது ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் மெசேஜ் செய்த போது தான் இது குறித்து தனக்கு தெரிய வந்தது என்றார். மேலும் கூறும்போது "அவர்கள் இது தங்கள் காதலர் தின பரிசு என்று என்னிடம் சொன்னார்கள்.

நான் அதிர்ச்சியடைந்தேன். நான் அதை எதிர்பார்க்கவில்லை. ஆனால், என்னை அன்புடன் வாழ்த்தும் ரசிகர்களுக்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பிரபல நாளிதழ் ஒன்றில் அவர் கூறியிருக்கிறார். இந்நிலையில் இது பற்றி அறிக்கை ஒன்றும் அவர் தற்போது வெளியிட்டுள்ளார். அதில் "எனது ரசிகர்கள் என்மேல் காட்டி இருக்கும் இந்த அளவு கடந்த அன்பை பார்த்து நெகிழ்ந்து போய் உள்ளேன். என்னை எப்பொழுதும் அவர்கள் சப்போர்ட் செய்கிறார்கள். 

என்னுடைய சில ரசிகர் மன்றங்கள் பல நற்செயல்களில் ஈடுபட்டு வருவதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்காக கோயில் கட்டிய ரசிகர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அந்த கோயிலை ஏழைகளின் உணவு இருப்பிடம் மற்றும் கல்விக்காக பயன்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

From around the web