திருமணத்திற்கு பிறகு இப்படி ஒரு போட்டோ தேவையா? குமுறும் ரசிகர்கள்!!!
காஜல், தற்போது வித்தியாசமான உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
Thu, 11 Mar 2021

நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கியவர், தமிழில் கடைசியாக கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மேலும் நடிகை காஜல் அகர்வாலுக்கும் கவுதம் கிட்ச்லு என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
அதுமட்டுமின்றி இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் நடித்துள்ள லைவ் டெலிகாஸ்ட் என்ற சீரிஸ் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் அவரின் திருமணத்திற்கு பின் எந்த ஒரு புகைப்படத்தையும் பதிவிடாமல் இருந்து வந்த காஜல், தற்போது வித்தியாசமான உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.