’வலிமை’ அப்டேட்டை அஜித்திடமே கேட்ட ரசிகர்: வைரல் புகைப்படம்

 

அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தின் அப்டேட்டை கேட்டு அவரது ரசிகர்கள் பல மாதங்களாக சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இந்த கோரிக்கை குறித்து செவிமடுக்காமல் படக்குழுவினர் தங்களது படப்பிடிப்பு வேலைகளில் மும்முரமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இதனையடுத்து ’வலிமை’ இயக்குனர் வினோத்m தயாரிப்பாளர் போனி கபூரை அஜித் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ’வலிமை’ படத்தின் அப்டேட்டை யாரிடம் கேட்பது என்று இல்லாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பலரிடமும் அஜித் ரசிகர்கள் கேட்ட காமெடி நடந்து வந்தது என்பது தெரிந்ததே 

valimai update

இந்த நிலையில் சமீபத்தில் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பின்போது அஜித்தை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அவரது ரசிகர் ஒருவர் கிடைத்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் அஜித்திடமே ’வலிமை’ படத்தின் அப்டேட் எப்போது வரும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அஜித் பிப்ரவரி இறுதியில் கண்டிப்பாக ’வலிமை’ அப்டேட் வரும் என்று கூறியதாக அந்த ரசிகர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் 

இந்த ட்விட் வைரலாகி வரும் நிலையில் ’வலிமை’ படத்தின் அப்டேட்டை இம்மாத இறுதியில் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்


 

From around the web