பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்

 
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும் பிரபல ஒளிப்பதிவாளருமான கேவி ஆனந்த் அவர்கள் சற்று முன்னர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் செய்தி திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது

சூர்யா நடித்த ’காப்பான்’ தனுஷ் நடித்த ’அனேகன்’ ஜீவா நடித்த ’கோ’ விஜய் சேதுபதி நடித்த ’கவண்’ உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் கேவி ஆனந்த். இவர் பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

kv anand

இந்த நிலையில் இன்று அதிகாலை கேவி ஆனந்த் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் உயிரிழந்ததாகவும் வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கே வி ஆனந்த் அவர்களின் மறைவு திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்றும் 54 வயதிலேயே அவர் உயிரிழந்தது திரையுலகினர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கேவி ஆனந்த் தனது அடுத்த படத்திற்கான திரைக்கதையை தயார் செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது அவரது மறைவு திரையுலகினர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பெரும் இழப்பு என்பது குறிப்பிடத்தக்கது

From around the web