காதலனை கரம் பிடித்த பிரபல சீரியல் நடிகை!

ரசிகர்கள் பலரும் பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்த முன்னாள் மீனாவான கவிதா கௌடாவின் நிஜ கணவர் யார் என்கிற ஆர்வத்தில் கூகுளில் தேடி வருகின்றனர்.
 
 
காதலனை கரம் பிடித்த பிரபல சீரியல் நடிகை!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள், பாடல் நிகழ்ச்சிகள், பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளிட்ட வரிசையில் விஜய் டிவி சீரியல்களும் மக்களிடையே பிரபலம்.

இந்த சீரியல்களுக்கு பல ரசிகர்கள் உண்டு. அதிலும் குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு தொடர் ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். அண்ணன் தம்பி, குடும்ப பாசம் என சினிமா கதைக்கு நிகரான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலின் தொடக்கத்தில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் கவிதா கெளடா.

முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிரபலமடைந்த மகாபாரதத்தின் மூலம் சின்னத்திரைக்கு வந்த கவிதா கெளடா. பிறகு, லஷ்மி பிரம்மா எனும் கன்னட நாடகத்திலும் ஹீரோயினாக நடித்தார். இதன் பின்னர் தான் ஜீவாவின் மனைவி மீனாவாக கவிதா கௌடா நடித்து வந்தார். அந்த நேரத்தில் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் வாய்ப்பு இவருக்கு வந்ததை அடுத்து,  இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகினார்.

இந்த சூழலில் தான் கவிதா கௌடாவுக்கு தற்போது நிச்சயதார்த்தம் ஆன புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாவதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்த முன்னாள் மீனாவான கவிதா கௌடாவின் நிஜ கணவர் யார் என்கிற ஆர்வத்தில் கூகுளில் தேடி வருகின்றனர்.

உண்மையில் கவிதா கௌடாவின் கணவர் வேறு யாரும் அல்ல, கவிதாவுடன் லஷ்மி பிரம்மா தொடரில் நாயகனாக நடித்த சந்தன்குமார் தான் என்பது தற்போது வெளியாகியுள்ள நிச்சயதார்த்த புகைப்படங்கள் மூலம் பலருக்கும் தெரிய வந்துள்ளது. கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web