துபாயில் ‘ஈஸ்வரன்’ படம் பார்த்த பிரபல காமெடி நடிகர்

 

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் நேற்று அவரது ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியான நிலையில் இன்று சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகி உள்ளது 

இந்த படத்தை சிம்புவின் ரசிகர்கள் மற்றும் நடுநிலை ரசிகர்கள் பார்த்து கொண்டாடி வருகின்றனர். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை காமெடி சென்டிமென்ட் மற்றும் ஆக்ஷன் கலந்து இருப்பதாகவும் இந்த படம் குடும்பத்துடன் பார்க்கும் வகையிலான ஒரு பொங்கல் ஸ்பெஷல் திரைப்படம் என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர் 

சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ரசிகர்களும் இந்த படத்தை பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் திரையுலக பிரபலங்களும் பலர் ஈஸ்வரன் படத்தை பார்த்து தங்களது கருத்துக்களை சமூக வலை தளங்கள் மூலமும் அளித்து வருகின்றனர் 

அந்த வகையில் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான பாலசரவணன் தற்போது படப்பிடிப்பு ஒன்றுக்காக துபாய் சென்றுள்ளார். இந்த நிலையில் துபாயில் உள்ள ஒரு திரையரங்கில் அவர் ஈஸ்வரன் படத்தை பார்த்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்

துபாய் தியேட்டரிலேயே இந்த திரைப்படம் 6 காட்சிகள் திரையிடப்படுகிறது என்பது அவர் பதிவு செய்துள்ள ஒரு புகைப்படத்தின் மூலம் தெரிய வருகிறது. இந்த படத்தை துபாயில் பார்த்ததாகவும் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் என்றும் பாலசரவணன் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web