பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் விவாகரத்து: ரசிகர்கள் அதிர்ச்சி

 
amirkhan kiran

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது மனைவியை விவாகரத்து செய்து உள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் என்பவரை கடந்த 2005 ஐந்தாம் ஆண்டு கிரண் ராவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆசாத் என்ற மகன் இருக்கும் நிலையில் 15 ஆண்டுகள் கழித்து தற்போது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்த அழகான 15 ஆண்டுகளில் நாங்கள் வாழ்க்கை அனுபவங்களையும், மகிழ்ச்சியையும், சிரிப்பையும் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். எங்களுடைய உறவு நம்பிக்கையாலும், மதிப்பினாலும், காதலினாலும் வளர்ந்திருக்கிறது. இப்போது நாங்கள் எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க விரும்புகிறோம்.

இனி நாங்கள் கணவன் மனைவியாக நீடிக்கப் போவதில்லை. ஆனால், சக பெற்றோராக, குடும்பமாக இணைந்திருப்போம். சில நாட்களுக்கு முன்பே நாங்கள் பிரிவதற்கு திட்டமிட்டு இருந்தோம். தற்போது அதை முறைப்படுத்துவதற்கான சூழல் அமைந்தது.

எங்கள் மகன் ஆசாத்துக்கு ஓர் அர்ப்பணிப்பான பெற்றோராக நாங்கள் நீடித்திருப்போம். அவனை நாங்கள் இருவரும் சேர்ந்தே பராமரித்து வளர்ப்போம். திரைப்படங்களிலும், பாணி அறக்கட்டளை உள்ளிட்ட வேலை தொடர்பான விஷயங்களில் தொடர்ந்து நாங்கள் பணியாற்றுவோம்.

எங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோரது தொடர் ஆதரவுக்கும், இந்த உறவின் பரிணாமம் குறித்த அவர்களது புரிதலுக்கும் மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் இல்லாமல் எங்கள் இந்த முடிவைப் பாதுகாப்பு உணர்வுடன் எடுத்திருக்க இயலாது.

எங்கள் நலம் விரும்பிகளிடம் வாழ்த்துகளையும், ஆசீர்வாதங்களையும் வேண்டுகிறோம். எங்களைப் போலவே நீங்கள் விவாகரத்து என்பதை ஒரு முடிவாகப் பார்க்காமல் ஒரு புதிய பயணத்துக்கான தொடக்கமாகப் பார்ப்பீர்கள் என்று நம்புகிறோம்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிகர் அமீர்கான் ஏற்கனவே ரீனா என்பவரை கடந்த 1986ஆம் ஆண்டு திருமணம் செய்து அதன்பின் 2002ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

amirkhan kiran

From around the web