மகேஷ்பாபுவின் படத்தைப் பற்றி கூறும் "பிரபல நடிகை"!

நடிகர் கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்துள்ள போஸ்ட்!
 
நடிகை கீர்த்தி சுரேஷின் ட்விட்டர் பக்கம் காணப்படும் புகைப்படம் மற்றும் தகவல்!

"உன் மேல ஒரு கண்ணு" என்ற பாடலை கேட்டால் நினைவுக்கு வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகர் சிவகார்த்திகேயனுடன் "ரஜினி முருகன்","ரெமோ "போன்ற படங்களில் நடித்து இருந்தார். இரு படங்களும் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இன்றளவும் காதலர் தினம் என்றால் ரெமோ படத்தில் அந்த புரோபோசல் சீன் தான் அனைவரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக உள்ளது.

keerthy suresh

மேலும் இவர், "தளபதி" என்று அழைக்கப்படும் நடிகர் விஜயுடன் "சர்க்கார்"," பைரவா" போன்ற திரைப்படங்களிலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர், "ஐ" பட நாயகனாக நடிகர் விக்ரமுடன் "சாமி 2" என்ற திரைப்படத்திலும் அவருக்கு கதாநாயகியாக வலம் வந்தார்.மேலும் இவர், "சூப்பர் ஸ்டார் "என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் உடன் "அண்ணாத்தே" என்ற திரைப்படத்திலும் அவருடன் நடிக்கிறார் என்பது அவருக்கு மட்டுமில்லாது அவரது ரசிகர்களும் மிகுந்த ஆனந்தத்தை கொடுத்துள்ளது .

இந்நிலையில் பிரபல நடிகரான மகேஷ்பாபுவின் "சர்காரு வாரி பாட்டா" என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தினை குறித்த தகவலையும், தான் இருக்கும் புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார். இதனை  காணும் ரசிகர்கள் மிகுந்த ஆனந்தத்திலும், கொண்டாட்டத்திலும் உள்ளனர். அவர் இருக்கும் புகைப்படம் ரசிகர்களை வைரலாக பரவி வருகிறது.

From around the web