90களின் பிரபல நடிகை நல்லெண்ணெய் சித்ரா காலமானார்!

 
actress chithra

தமிழ் திரையுலகில் கடந்த 80கள் மற்றும் 90களில் பிரபல நடிகையாக இருந்த நல்லெண்ணெய் சித்ரா என்று அழைக்கப்படும் சித்ரா காலமானார். அவருக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதையடுத்து அவர் காலமானதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மறைந்த நடிகை சித்ராவுக்கு வயது 56

கே பாலச்சந்தர் இயக்கிய அவள் அப்படித்தான் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய சித்ரா, அதன்பின் அபூர்வராகங்கள், ராஜபார்வை உள்ளிட்ட படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் 

பின்னர் சின்ன பூவே மெல்ல பேசு, மனதில் உறுதி வேண்டும், என் தங்கச்சி படிச்சவ, ஊர்காவலன், சேரன் பாண்டியன், திருப்புமுனை உள்பட பல தமிழ் படங்களில் நடித்தார். மேலும் தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாள படங்களிலும் அவர் நடித்துள்ளார் என்பதும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நல்லெண்ணெய் சித்ரா தனது சாலிகிராமம் வீட்டில் வசித்து வந்த நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் காலமானதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் பெரும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

From around the web