பாலியல் தொழிலாளிகளுடன் துர்கா பூஜை கொண்டாடிய பிரபல நடிகை!

 

தென்னிந்தியாவில் ஆயுதபூஜை விசேஷமாகக் கொண்டாடப்படுவது போல் அதே நாட்களில் வட இந்தியாவில் துர்கா பூஜை கொண்டாடப்படுகிறது. குறிப்பாக மேற்கு வங்கத்தில் மிக சிறப்பாக துர்கா பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி நடிகை மகிமா சர்மா என்பவர் கொல்கத்தாவில் உள்ள பாலியல் தொழிலாளிகளுடன் இந்த துர்கா பூஜையை கொண்டாடியுள்ளார் 
கொல்கத்தாவில் உள்ள சிவப்பு விளக்கு பகுதியான சோனாகஞ்ச் என்ற இடத்திற்கு சென்ற நடிகை மகிமா சர்மா, அங்கு உள்ள பாலியல் தொழிலாளிகளுடன் துர்கா பூஜையை கொண்டாடியதாக தெரிவித்துள்ளார் 

மேலும் அங்கு உள்ள பாலியல் தொழிலாளிகளுக்கு வேறு வேலைகள் ஏற்பாடு செய்து அவர்களை இந்த தொழிலில் இருந்து மீட்க வேண்டும் என்றும் பாலியல் தொழிலில் அப்பாவி பெண்கள் பலர் வேறு தொழிலுக்கு செல்ல விரும்புகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார் 

5 நாட்கள் நடைபெறும் துர்கா பூஜையில் பாலியல் தொழிலாளிகளுடன் கலந்து கொண்டு கொண்டாட இருப்பதால் தான் மிகவும் மகிழ்ச்சியாக கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் வித்தியாசமாக துர்கா பூஜை கொண்டாடிய நடிகை மகிமா சர்மாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன

From around the web