பிரபல இந்தி திரைப்பட நடிகை ஆலியா பட்டிற்கு கொரோனா!

இந்தி திரைப்பட உலகின் முன்னணி இளம் நடிகையான ஆலியா பட் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
 

ஆலியா பட் மும்பையில், சஞ்சய் லீலா பன்சாலியின் கங்குபாய் கத்தியாவாடி என்கிற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்துகொண்டிருக்கிறார்.  இந்த நிலையில் தான் நடிகை ஆலியா பட், தமது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டிருந்தார்.

நள்ளிரவில் வெளியிட்ட அந்த தகவல் குறிப்பில், “எல்லாருக்கும் வணக்கம்.  எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளதால், நான் உடனே என்னை தனிமைப்படுத்தி கொண்டதுடன் என்  வீட்டில் தங்கி சிகிச்சை பெறவிருக்கிறேன். குறிப்பாக என்னுடைய மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அவர்கள் கூறும் அனைத்து அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன்” என தெரிவித்துள்ளார். 

அத்துடன் தன்னுடைய பதிவில், ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்ததுடன், அனைவரையும் பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டு கொண்டார். இந்த மாத தொடக்கத்தில் பன்சாலிக்கும் பின்னர், ஆலியாவின் காதலரான நடிகர் ரன்பீர் கபூருக்கும் கடந்த மாதம் கொரோனா தொற்று பாதிப்பு உண்டாகியது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் தான் ராஜமவுளி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான திரைப்படமான ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஆல்யா பட்டின் கேரக்டரை போஸ்டருடன் இயக்குநர் ராஜமவுளி வெளியிட்டிருந்தார்.

From around the web