இரண்டு நாட்களில் வெளியாகிறது பிரபல நடிகரின் ட்ரெய்லர்...!

மலையாளத்தில் ஜாம்பவானாக திகழ்பவர் நடிகர் மோகன்லால். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழிலும் "இருவர் "என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் .மேலும் இவர் உலகநாயகன் கமலஹாசன் நடித்த "உன்னைப்போல் ஒருவன் "என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இவர் "தளபதி" என்று அழைக்கப்படும் நடிகர் விஜய்யுடன் "ஜில்லா" திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார் ஜில்லா திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு அப்பாவாக நடித்து இருந்தார். இந்த கதாப்பாத்திரம் தமிழ் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
தற்போது தான் நடித்திருக்கும் "த்ரிஷ்யம் 2 "என்ற படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதியை நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார். இந்நிலையில் "த்ரிஷ்யம் 2 " என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் வருகின்ற 8ம்தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார். இவர் அறிவித்துள்ள இத்தகவல் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த மலையாள சினிமாவையும் ஆனந்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
The mystery continues... #Drishyam2Trailer out on Feb 8!#Drishyam2OnPrime coming soon, @PrimeVideoIN.#MeenaSagar #JeethuJoseph @antonypbvr@aashirvadcine @drishyam2movie #SatheeshKurup pic.twitter.com/qNiNZ93tRJ
— Mohanlal (@Mohanlal) February 5, 2021