தந்தையாக பெருமிதம் கொள்ளும் "பிரபல நடிகர்"...,

பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் "மகள் எழுதிய புத்தகம்"...,
 
நடிகர் மோகன்லாலின் ட்விட்டர் பக்கம் கூறும் கருத்து...,

யாராலும் அசைக்க முடியாத மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்பவர் பிரபல மலையாள நடிகர் "மோகன்லால்". "லூசிபர்", "பிக் பிரதர்" போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழில் "உலகநாயகன்" என்று அழைக்கப்படும்  கமல்ஹாசனுடன் "உன்னைப்போல் ஒருவன்" என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார்.

mohanlal

மேலும் "தளபதி" என்று அழைக்கப்படும் நடிகர் விஜய்யுடன் "ஜில்லா" என்ற திரைப்படத்திலும் "நடிகர் மோகன்லால்" நடித்துள்ளார். ஜில்லா திரைப்படத்தில் இவர் நடிகர் விஜய்க்கு தந்தையாக நடித்திருந்தார். இவரின் நடிப்பும், இவர் பேசும் விதமும்,இவரின் ஸ்டைலும் தமிழ் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று இப்படம் ஹிட்டடித்தது.

சில நாட்களுக்கு முன்பு நடிகர் மோகன்லாலின் மகள் எழுதிய புத்தகம் வெளியானது. இதனால் நடிகர் மோகன்லால் ஒரு தந்தையாக மிகவும் ஆனந்தத்திற்கு உள்ளானார். தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புகைப்படத்துடன் கூறிய கருத்தையும் தெரிவித்துள்ளார்.

"எனது மகள் விஸ்மயாவின் புத்தகம் ஏற்கனவே # பெஸ்ட்செல்லராக இருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. உங்களிடம் புத்தகம் இருக்கும்போது உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் ".

நாளை பிப்ரவரி 14 ஆம் தேதி முதல், இந்தியா முழுவதும் உள்ள புத்தகக் கடைகளில் புத்தகங்கள் கிடைக்கும்!
இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் மோகன்லால் கூறியுள்ளார்.

From around the web